மேலும் செய்திகள்
கழிவுநீர் வாய்க்காலில்குப்பையால் நோய் தொற்று
01-Sep-2025
கரூர், கரூர் அருகே, மின்சார டிரான்ஸ்பார்மர் கீழ் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. குப்பை தீப்பிடித்து எரிந்தால், டிரான்ஸ்பார்மர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.கரூர்-வாங்கப்பாளையம் சாலை வழியாக, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வாங்கப்பாளையம் சாலையில், மின்சார டிரான்ஸ்பார்மர் கீழ் பகுதியில், கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. குறிப்பாக இறைச்சி, மருத்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மேலும் சிலர், சாலையில் குவிந்துள்ள குப்பைக்கு தீ வைக்கின்றனர். அதில் ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகள் தடுமாறுன்றனர். மேலும், குப்பையில் தீ ஏற்படும் போது, மின்சார டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து, மின் துண்டிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாங்கப்பாளையம் சாலையில் குவிந்துள்ள குப்பையை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
01-Sep-2025