மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
21-May-2026
குளித்தலை : திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த திருநாராயணபுரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி, 59. இவர். நாதஸ்வரம் வாசிப்பவர். இவரது மகள் ஸ்ரீ ரஞ்சனி, 22, குளித்தலை அடுத்த வை.புதுாரில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக இருந்து வந்தார். கடந்த 19ம் தேதி மாலை, 5:25 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர். பின்னர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
21-May-2026