உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன்னாள் அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

முன்னாள் அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

முன்னாள் அரசு ஊழியருக்குகொலை மிரட்டல்: 2 பேர் கைதுகுளித்தலை, நவ. 15-குளித்தலை, நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 60. இவர், பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து, பணி ஓய்வு பெற்றார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, தனக்கு சொந்தமான ஆடுகள் காணாமல் போனது பற்றி லோகநாதன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிஷோர், 22, சதீஷ், 31, ஆகியோர் எங்களை சந்தேகப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறாயா? என, கேட்டதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கிஷோர் தன் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து, லோகநாதன் தலையிலும், கையிலும் வெட்டினார். பின்னர், சதீஷ் கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் லோகநாதன் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து லோகநாதன் கொடுத்த புகார்படி, குளித்தலை எஸ்.ஐ., ராமசாமி வழக்குப்பதிவு செய்து, கிஷோர், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !