உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம்

துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், துாய்மை பணியாளர்களுக்கு தாமதமாக சம்பளம் கிடைப்பதால், சிரமப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகம் உட்பட 21 கிராம பஞ்சாயத்துகளில், துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும், பஞ்சாயத்து மூலம் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவி காலம் முடிந்து, யூனியன் நிர்வாகம் பஞ்சாயத்து பொறுப்புகளை கவனித்து வருகிறது. துாய்மை பணியாளர்களுக்கு மாதம் தோறும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, துாய்மை பணியாளர்களுக்கு விரைந்து சம்பளம் வழங்கும் வகையில், யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !