உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இறைச்சி கடைகளை ஒழுங்குப்படுத்த கோரிக்கை

இறைச்சி கடைகளை ஒழுங்குப்படுத்த கோரிக்கை

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதியில், 100க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு மீதமாகும் கழிவுகளை, ஒருசில கடைக்காரர்கள் அப்புறப்படுத்தி விடுகின்றனர். ஆனால் சிலர், கழிவுகளை தெரு நாய்கள் உண்பதற்காக வீசி விடுகின்றனர். இதனால் தினமும் பச்சை கறிகளாக சாப்பிடுவதால், தெரு நாய்களுக்கு வெறி பிடித்து சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.அரவக்குறிச்சியில் ஒவ்வொரு தெருவிலும், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. எனவே, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இறைச்சி கடைகளை, ஓரிடத்தில் அமைத்து அதன் கழிவுகளை குப்பை கிடங்குகளில் அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்ல உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்