உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டெங்கு விழிப்புணர்வு முகாம்

டெங்கு விழிப்புணர்வு முகாம்

குளித்தலை:குளித்தலை அடுத்த இனுங்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமையில், இனுங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், பருவ மழை காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், சுகாதார மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், குளித்தலை வட்டார பகுதியில் உள்ள நச்சலுார் மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளி, குளித்தலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆகிய பள்ளிகளில் பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் டெங்கு நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை