அரவக்குறிச்சியில் தேவர் குரு பூஜை விழா
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி ஒன்றிய இந்து முன்னணி சார்பில், தாலுகா அலுவலகம் முன் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது.முத்துராமலிங்கத் தேவரின், 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அரவக்குறிச்சி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட, அவரது திருஉருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். மேலும், வேலம்பாடி கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.