புகழூர் நகராட்சியில் ரூ.2.08 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
கரூர், புகழூர் நகராட்சியில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ முன்னிலை வகித்தார். பணிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். புகழூர் நகராட்சிக்குட்பட்ட குழந்தைமலை நகர் மெயின் வீதியில், 3 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பித்தல் பணி, 19.81 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணப்பிள்ளை தெரு, மலை வீதி, கரூர் ரோடு முதல் தெரு, பண்ணை ரைஸ் மில் தெரு, கருப்பண்ணப்பிள்ளை தெரு, மெம்பர் கந்தசாமி தெரு ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை புதுப்பித்தல் பணி.மற்றும் 20.64 லட்சம் ரூபாய் மதிப்பில் அண்ணா நகர் மற்றும் குறுக்கு தெருக்களில் தார்ச்சாலை புதுப்பித்தல் பணி என மொத்தம், 2.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 11 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், நகராட்சி கமிஷனர் ஹேமலதா, பொறியாளர் மலர்கொடி உள்பட பலர் பங்கேற்றனர்.