உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பகவதியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பகவதியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

குளித்தலை, டிச. 15-குளித்தலை, பாரதி நகர் தேவேந்திர குல தெருவில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. விழாவையொட்டி, கிராம மக்கள் நேற்று முன்தினம் கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து, மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்களை எடுத்தும், அக்னி சட்டி, அலகு குத்தியும், குழந்தையை தொட்டிலில் போட்டும் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.முன்னதாக, குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பேராளகுந்தாளம்மன் கோவில், மாரியம்மன் கோவிலை சுற்றியபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர், பகவதி அம்மன் கோவிலில் தீர்த்தக்குடங்களில் இருந்த புனித நீரை, சுவாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்.நேற்று மதியம் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாலை மாவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை