உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புலியூர் டவுன் பஞ்., ரேஷன் கடைகளில் 5 மாதமாகியும் வேட்டி, சேலை கிடைக்கல

புலியூர் டவுன் பஞ்., ரேஷன் கடைகளில் 5 மாதமாகியும் வேட்டி, சேலை கிடைக்கல

கரூர் :புலியூர் டவுன் பஞ்.,ல், உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் முடிந்து, ஐந்து மாதங்களை கடந்தும் வேட்டி, சேலை முறையாக வழங்கவில்லை.தமிழக அரசால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டம் புலியூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், 1,600க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இன்னும், பெரும்பாலான கிராமங்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இது குறித்து, புலியூர் டவுன் பஞ்., 4வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் கூறியதாவது: புலியூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பான முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பல இடங்களில் வேட்டி, சேலை முறையாக வழங்கப்படவில்லை. பெரும்பாலான கடைகளில் குறைந்த அளவிலேயே வேட்டி, சேலை வந்தது. சில கடைகளில் வேட்டி மட்டும், சில கடைகளில் சேலை மட்டும், சில கடைகளில் இரண்டுமே வழங்கவில்லை. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால், ஏதாவது பதில் சொல்லி சமாளித்து வருகின்றனர். ஐந்து மாதங்கள் முடிந்த நிலையிலும், தகுதியான கார்டுதாரர்களுக்கு முழுமையாக வேட்டி, சேலை வழங்கப்படவில்லை.இவ்வாறு கூறினார்.இது குறித்து, கரூர் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''மாவட்டத்தில், 70 சதவீதம் வேட்டி சேலை வந்தது. புலியூர் பகுதியில் வேட்டி, சேலை வழங்கவில்லை என்ற புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை