மேலும் செய்திகள்
காசநோய் ஒழிப்பு முகாம் இலவச பரிசோதனை செய்யலாம்
08-Dec-2024
டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்கலெக்டர் தொடங்கி வைப்புகரூர், டிச. 8-காசநோய் இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்கும் வகையில், டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.அப்போது, அவர், கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் காசநோய் வருவதற்கான அதிக வாய்ப்புள்ளவர்களை பரிசோதனை செய்து, நோய் கண்டறிந்து சிகிச்சை செய்ய, 100 நாள் காசநோய் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்று காசநோய் கண்டுபிடிப்பை அதிகரித்து, காசநோய் இறப்பு விகிதத்தை குறைத்து, காசநோய் இல்லாத கரூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர், கூறினார்.அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் லோகநாயகி, துணை இயக்குநர் (காசநோய்) சரவணன், மாநகராட்சி நல அலுவலர் கவுரி சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
08-Dec-2024