மேலும் செய்திகள்
கோவில் விழாவில் தகராறு இரண்டு வாலிபர்கள் கைது
04-Jul-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கோட்டமேட்டில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது.அப்போது, நடன நிகழ்ச்சியை, அதே பகுதியை சேர்ந்த விவேக், 28, இவரது நண்பர் ஜீவா, 22, ஆகியோர் போட்டோ எடுத்துள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. சமாதானம் பேசி அனைவரும் வீட்டிற்கு சென்றனர். பின், விவேக், ஜீவா ஆகிய இருவரும், வெள்ளியணை அரவிந்த் மனைவி மஞ்சுளா, 22, வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, அதே ஊரை சேர்ந்த அம்மாசி மகன்கள் மணிகண்டன், 21, சிவா, 22, செல்வம் மகன்கள் குட்டி, 23, விக்கி, 23, ஆகிய, நான்கு பேர் வந்து, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பீர் பாட்டிலால், விவேக், ஜீவா, மஞ்சுளா ஆகியோரை தாக்கினர். இதில் காயமடைந்த அவர்கள், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து விவேக் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
04-Jul-2025