உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ் நிற்காத இடத்தில் நிழற்கூடம் கட்டும் பணி நடப்பதால் அதிருப்தி

பஸ் நிற்காத இடத்தில் நிழற்கூடம் கட்டும் பணி நடப்பதால் அதிருப்தி

பஸ் நிற்காத இடத்தில் நிழற்கூடம்கட்டும் பணி நடப்பதால் அதிருப்தி கரூர், செப். 20-கரூரில் பஸ்கள் நிற்காத இடத்தில், நிழற்கூடம் அமைக்கப்பட்டு வருவதால், நிதி வீணாவதாக புகார் எழுந்துள்ளது.கரூர் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில், தொகுதி மேம்பாட்டு நிதி, தனியார் நிறுவனங்கள் சார்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் அமைக்க, சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையாக இருந்தால் அனுமதி அளிக்கின்றனர். தற்போது, பஸ் நிற்காத இடம், தேவையில்லாத இடங்களில் நிழற்கூடம் அமைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.கரூர் மாநராட்சி தான்தோன்றிமலை, காந்திகிராமம், சணப்பிரட்டி உள்பட பல்வேறு இடங்களில் நிழற்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், சில இடங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் நிழற்கூடம் அமைக்கப்படுகிறது. தற்போது, கரூர் சுங்ககேட், அரசு மருத்துவக் கல்லுாரி ஆகிய இடங்களில், பஸ் ஸ்டாப்பை விட்டு சற்று தொலைவில் நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.சில பஸ் ஸ்டாப்களில், கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அகற்ற விட்டு நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்காமல், காலியாக இருக்கும் இடத்தில் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். எனவே, பஸ் நிற்கும் இடங்களில் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை