உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வழங்கல்

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வழங்கல்

கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிக-ளுக்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வழங்கும் பணியை, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.அப்போது, அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை முன்னிட்டு கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வினி-யோகம் செய்யும் பணி நடக்கிறது. அந்த படிவத்தில் வாக்காளர்-களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வரிசை எண், ஓட்டுச்சாவடி அமைவிடம், சட்டசபை தொகுதி போன்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபரங்களை கியூ.ஆர்., குறியீடு வாயிலாக எளிதாக சரிபார்க்கும் வசதியும் செய்-யப்பட்டுள்ளது. வாக்காளரின் தற்போதைய புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதன் அருகில் புதிய வண்ணப் புகைப்படம் ஒட்-டுவதற்காக இடம் விடப்பட்டுள்ளது.வாக்காளர் பூர்த்தி செய்யும் பகுதியில் பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், அவ-ரது வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது இடம் பெற்றிருந்த வாக்காளர், உறவினர்-களின் விபரங்கள் தனியாக கேட்கப்பட்டுள்ளன.தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்-பது, இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், 2 இடங்களில் ஓட்டு-ரிமை உள்ளவர்களை நீக்குவது இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நோக்கமாகும். கிருஷ்ணராயபுரம் தொகுதியில், 260 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அரவக்கு-றிச்சி தொகுதியில், 253 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.கிருஷ்ணராயபுரம் தாசில்தார் விஜயா, அரவக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை