உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட கிரிக்கெட் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு போட்டி

மாவட்ட கிரிக்கெட் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு போட்டி

கரூர், 'கரூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு போட்டிகள், நாளை நடக்கிறது' என, மாவட்ட செயலர் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம் கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயது மற்றும் 16 வயது கிரிக்கெட் போட்டி, கரூர் மாவட்ட அணிக்கு வீரர், வீரங்கனைகள் தேர்வு செய்ய நாளை போட்டிகள் நடக்கிறது. பங்கேற்க உள்ள வீரர்கள், தங்களின் பிறப்பு சான்று, ஆதார் கார்டு அல்லது பள்ளியில் படிப்பதற்கான சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு, நாளை காலை, 6:30 மணிக்கும், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம், 3.00 மணிக்கு, மகளிர் அணிக்கான போட்டிகள், 4 ம் தேதி காலை, 7.00 மணிக்கு தேர்வு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள, கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையத்துக்கு வர வேண்டும். மேலும், 98945- 48428, 99658- 17668 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ