உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீபாவளி தொடர் விடுமுறை: வெறிச்சோடிய கரூர் சாலை

தீபாவளி தொடர் விடுமுறை: வெறிச்சோடிய கரூர் சாலை

கரூர், தீபாவளி பண்டிகையையொட்டி, கரூரில் வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் வெறிச்சோடின.நாடு முழுவதும் நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்ப ட்டது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த, 18 முதல் நேற்று வரை நான்கு நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், கரூரில் ஜவுளி நிறுவனங்கள், கொசு வலை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்களுக்கும் நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், நேற்று கரூர் நகரில் பெரும்பாலான ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.இதனால், கரூர் நகரில் நேற்று, கோவை சாலை, திருச்சி சாலை மற்றும் ஜவஹர் பஜார் பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், கரூர் நகரப்பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை விட்டு, விட்டு மழை பெய்ததால், சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஆனால், வங்கிகள், எல்.ஐ. சி., நிறுவனம், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், வருமான வரித்துறை அலுவலகம், உள்ளிட்ட, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ