பொக்லைன் உதவியுடன் வாய்க்கால் துார்வாரும் பணி
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம், பாசன வாய்க்காலில் பொக்லைன் இயந்திரம் கொண்டு துார் வாரும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வேகேட் பிரிவு பகுதியில் இருந்து, பிள்ளபாளையம் வரை பாசன வாய்க்கால் செல்கிறது. இப்பகுதி விளை நிலங்களுக்கு வாய்க்கால் தண்ணீர் செல்கிறது. வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பாசன வாய்க்காலில், அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வந்தது. இதனால் தண்ணீர் விளை நிலங்களுக்கு குறை-வாக சென்றது.இந்நிலையில், நீர்வளத்துறை மூலம் பாசன வாய்க்காலில் வளர்ந்த ஆகாயத்தாமரை செடிகள் முழுவதும், பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது. இதையடுத்து, வாய்க்காலுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் சென்றது.