ஈச்சர் லாரி-கன்டெய்னர் மோதி டிரைவர் பலி
கரூர், கரூர் அருகே, ஈச்சர் லாரி-கன்டெய்னர் மோதிக் கொண்டதில், கன்டெய்னர் லாரி டிரைவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை தென்பாகம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 61, டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, கரூர்-சேலம் சாலை ராம் நகர் அருகே, ஈச்சர் கன்டெய்னரை ஓட்டி கொண்டு சென்றுள்ளார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த, மற்றொரு ஈச்சர் லாரியின் பின் பகுதியில், கன்டெய்னர் லாரி மோதியது. அதில், தலை மற்றும் வயிற்றில் படுகாயம் அடைந்த கருப்பண்ணன், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, வெங்கமேடு போலீசார் ஈச்சர் லாரி ஓட்டி சென்ற, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, டிரைவர் ஹனீப் ஜமாலுதீன் பார்க்கர், 49, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.