உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி அருகில் போதை மாத்திரை விற்பனை; இரு வாலிபர் கைது

பள்ளி அருகில் போதை மாத்திரை விற்பனை; இரு வாலிபர் கைது

கரூர்: தனியார் பள்ளி அருகில், போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கரூர், வெண்ணைமலையில் செயல்படும் தனியார் பள்ளி அருகில், போதை மாத்திரை விற்பனை செய்வதாக, வாங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் பள்ளி அருகில் வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., செந்-தில்குமார் தலைமையில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், நாமக்கல் மாவட்டம் மோகனுாரை சேர்ந்த ரூபன், 22, அதே மாவட்டம் க.பரமத்தி வேலுாரை சேர்ந்த இலியாஸ், 25, ஆகியோர் விற்பனை செய்து வந்தனர். அவர்களிடம் இருந்து, 2,070 ரூபாய் மதிப்புள்ள, 64 போதை மாத்திரைகள், அதனை செலுத்தும் ஊசி ஆகிய-வற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் க.பரமத்தி வேலுாரை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் ஆன்லைனில் வாங்கியது தெரியவந்தது. ரூபன், இலியாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலை-மறைவாக உள்ள கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை