உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொடர் மழை காரணமாக வரத்து சரிவு கிலோ ரூ.200ஐ தொட்டது முருங்கை

தொடர் மழை காரணமாக வரத்து சரிவு கிலோ ரூ.200ஐ தொட்டது முருங்கை

கரூர்: தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால், முருங்-கைக்காய் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டாரத்தில், முருங்கை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது.கடந்த ஜூனில், முருங்கைக்காய் சீசன் தொடங்கிய நிலையில், அக்டோபர் வரை ஒரு கிலோ அதிகபட்சமாக, 50 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள, மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வரத்து, கடந்த ஒரு வாரமாக குறைந்துள்ளது. இதனால், முருங்கை விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கடந்த நவம்பரில் சீசன் நிறைவு பெற்ற நிலையில், முருங்-கைக்காய் சாகுபடி குறைந்துள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கரூர் மாவட்டம், க.பரமத்தி, அரவக்-குறிச்சி வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக, முருங்கைக்காய் செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்து விடுவதால், காய் பிடிப்பது இல்லை.மேலும், நடப்பு கார்த்திகை மாதத்தில் திருமணம் உள்ளிட்ட, சுப விசேஷங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால் முருங்கைக்-காய்க்கு, கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் வரத்து குறைவால் கிலோ முருங்கைக்காய் விலை, 180 முதல், 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை