மேலும் செய்திகள்
பைக் திருட்டு; டிரைவர் புகார்
23-Feb-2025
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, மது போதையில், பாசன வாய்க்காலில் விழுந்த முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமலை, 52, திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம், வேலாயுதம்பாளையம் அருகே, புகழூர் பாசன மேட்டு வாய்க்காலில், மது போதையில் தவறி விழுந்துள்ளார். அப்போது, வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், வீரமலை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, வீரமலையின் சகோதரர் ராமன், 49, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
23-Feb-2025