மேலும் செய்திகள்
டூவீலர்கள் மோதி விபத்து
09-Sep-2024
அரவக்குறிச்சி: கரூர், காந்திகிராமம் ஜேஜே கார்டன் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன், 62. இவர் கரூர்-திண்டுக்கல் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மலைக்கோவிலுார் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்றபோது, இதே சாலையில் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு லாரி, வீரப்பன் ஒட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்த வீரப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டூவீலர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. உடனடியாக வீரப்பனை மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அடையாளம் தெரியாத லாரி குறித்து, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.
09-Sep-2024