உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாகனம் மோதியதில் முதியவர் பரிதாப பலி

வாகனம் மோதியதில் முதியவர் பரிதாப பலி

கரூர், கரூர் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வெங்கமேடு புதுகாளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 74; இவர் நேற்று முன்தினம், கரூர்-வெங்கமேடு சாலை பெரியார் ஜங்ஷன் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், ஆறுமுகம் மீது மோதியது. அதில், தலையில் அடிபட்ட ஆறுமுகம் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆறுமுகத்தின் மகன் சுப்பிரமணி, 43, கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை