உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேன் மோதி மூதாட்டி பலி

வேன் மோதி மூதாட்டி பலி

கரூர், கரூர் அருகே, வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.கரூர், தான்தோன்றிமலை முத்துலாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள், 60; இவர் கடந்த, 24ல் கரூர்-பாளையம் சாலை தான்தோன்றிமலையில், ஸ்டூடியோ முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், 39; என்பவர் ஓட்டி சென்ற, வேன் செல்லம்மாள் மீது மோதியது.அதில், தலையில் படுகாயமடைந்த செல்லம்மாள், அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து, செல்லம்மாளின் மகன் அண்ணா துரை, 41, கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ