உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உணவு பொருட்கள் வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

உணவு பொருட்கள் வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

கரூர்: கரூர் நகர, உணவு பொருட்கள் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கரூரில், நகர உணவு பொருட்கள் வணிகர் சங்கத்தின் மகாசபை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெருமாள்பாபு, 2023-24 ஆண்டறிக்கை, சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். பின், மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மீண்டும் சங்க தலைவராக லோகநாதன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் பெருமாள்பாபு, பொருளாளர் கணபதி, துணைத் தலைவர்கள் ராமசாமி, சக்திவேல், சண்முகநாதன், பரமசிவம் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில், மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ராஜீ உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை