உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தபால் ஓட்டு போடுவதில் தேர்தல் பணி ஊழியர்கள் ஆர்வம்

கரூரில் தபால் ஓட்டு போடுவதில் தேர்தல் பணி ஊழியர்கள் ஆர்வம்

கரூர் : தமிழகத்தில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், -அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, 1,137 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கரூர் தொகுதிக்குட்பட்ட, 1,434 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட, 1,423 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரியிலும், -குளித்தலை தொகுதிக்குட்பட்ட, 1,338 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என, 5,332 ஓட்டுச்சாவடி அலுவலர்களான அரசு பணியாளர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது.அங்கு, தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, பிற தொகுதி மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போடும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது. அதன்படி, தொகுதி வாரியாக பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஊழியர்கள், தங்கள் ஓட்டுகளை செலுத்தினர். தவிர, தொகுதிக்குட்பட்ட இடங்களில் வசிக்கும், 85 வயதுக்கு மேல் நடக்க முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்று, ஓட்டு பெறும் பணி இரண்டு தினங்களாக நடந்தது. இந்த இரண்டு தினங்களில் விடுபட்டவர்களுக்கு வரும், 18ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை