சேதமடைந்த நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்கள்
கரூர், கரூர் அருகே, மின்சார டிரான்ஸ்பார்மரின் சிமென்ட் துாண்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.கரூர் மாவட்டம், வாங்கல் அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு, சாலை ஓரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார டிரான்ஸ்பார்மரின் சிமென்ட் துாண்கள் சேதமடைந்த நிலையில், எந்நேரமும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, அந்த பகுதி மக்கள், மின் வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மின்சார டிரான்ஸ்பார்மரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.எனவே, டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்களை மாற்ற, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.