மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
31-Jul-2025
கரூர், கரூரில், வரும் 14ல், மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இதுகுறித்து, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த பகுதியில், மாதாந்திர மின் குறைதீர் கூட்டம், மூன்று இடங்களில் நடக்கிறது. அதன்படி வரும், 14ல் கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 21ல் குளித்தலை செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 28ல் கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும் (கிராமியம்) மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.மூன்று இடங்களிலும் காலை, 11:00 மணிக்கு மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அதில், பொது மக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
31-Jul-2025