உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் நகர பகுதியில் மின்சார பராமரிப்பு பணிகள் தீவிரம்

கரூர் நகர பகுதியில் மின்சார பராமரிப்பு பணிகள் தீவிரம்

கரூர்: கரூர் நகர பகுதியில், மின்சார பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், தடையின்றி மின் வினியோகம் செய்ய மாதந்தோறும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாதம் ஒரு நாள் மட்டும் மின் நிறுத்தம் மேற்கொண்டு, மின்சார ஒயர்களை ஒட்டி செல்லும் மரக்கிளைகளை அகற்றுதல், சேதமான கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கின்றனர்.இதன்படி, கரூர் துணை மின்நிலையத்திற்குப்பட்ட செங்குந்தபுரம், 80 அடி சாலை, செங்குந்தபுரம், காமராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிக்கு மின் நிறுத்தம் செய்யப்பட்டது. தாழ்வாக உள்ள மின்கம்பிகளை மாற்றுதல், மின்மாற்றிகள், பில்லர்கள் பராமரிப்பு, பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது, செங்குந்தபுரம் பிரதான சாலையில் சேதமான மின் கம்பத்தை கிரேன் மூலம் அகற்றி விட்டு, புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை