உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் வீணாக கிடக்கும் மின் கம்பங்கள்

சாலையோரம் வீணாக கிடக்கும் மின் கம்பங்கள்

கரூர், டிச. 21-கரூரில், சாலையோரம் வீணாக மின் கம்பங்கள் கிடக்கின்றன.கரூர் மாநகராட்சி பகுதியில், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில், பழைய மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடும் பணியில் மின்வாரியத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் புதிய மின்கம்பங்கள் வீணாக கிடக்கிறது.கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகில், மக்கள் பாதை சென்டர் மீடியனை ஒட்டி, மின்கம்பங்கள் வீணாக கிடக்கின்றன. பல்வேறு இடங்களில், மின் கம்பங்கள் சேதமடைந்து சாயும் நிலையில் உள்ளது. இங்கு, புதிய மின் கம்பங்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வருகிறது. அப்படியே சில மாதங்களாக கிடந்தால், எதற்கும் உதவாமல் பயனற்று போகும் நிலை ஏற்படும். சாலையிலேயே கிடப்பதால், மின் கம்பங்கள் போக்குவரத்து இடைஞ்சலாக உள்ளது. எனவே, மின் கம்பங்களை பயனுள்ள வகையில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை