உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாஜி ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

மாஜி ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

மாஜி ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்கரூர், அக். 23- முன்னாள் ராணுவ வீரர்கள், தொழில் தொடங்க கடன் பெற வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை மானியத்தில் கடன் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். அவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.இதற்கு, ராணுவ பணியின்போது உயிரிழந்த வீரார்களின் மனைவிகள் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மாவட்டத்தினை சார்ந்த சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களது விருப்ப விண்ணப்பத்தை, திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும், 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி