உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்

கரூரில் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்

கரூர், கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி ஆலோசனைகளை வழங்கி பேசினார். ஜூன் 3ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும். தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில், தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி