மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் உதவி கூலி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கரூர்: கூலி தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட கூட்-டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் வழங்க அரசு முன் வர வேண்டும்.கரூர் மாவட்டத்தில், பல்வேறு தொழிற்சாலைகள் இருந்தாலும் விவசாய தொழிலாளர்களும், கட்டட வேலை, கல் குவாரியில் வேலை செய்யும் தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் முன்னுார், குப்பம், அத்திப்பாளையம், நடந்தை, காருடையம்பாளையம், நெடுங்கூர், பவித்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு, வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்கள் கடும் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பொங்கல் பண்-டிகை செலவுக்கு போதிய வருமானம் இருப்பதில்லை. இவர்கள் செலவை சமாளிக்க, கந்து வட்டிக்காரர்களை அணுக வேண்டிய நிலை உள்ளது. இதில் சிக்கும் கூலி தொழிலாளர்கள், அவர்க-ளுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆண்டு முழு-வதும் உழைத்து பெறும் பணத்தை, கந்துவட்டி அளிக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கூலி தொழிலாளர்களுக்கு கடன் வழங்கினால் உதவியாக இருக்கும்.