உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவரை தாக்கிய விவசாயி கைது

மாணவரை தாக்கிய விவசாயி கைது

மாணவரை தாக்கியவிவசாயி கைதுகுளித்தலை, நவ. 28-குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., தேசியமங்கலம் வசந்தபுரி காலனியை சேர்ந்த நவீன், 18, திருச்சியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் தேசியமங்கலம் பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது அதே ஊரை சேர்ந்த அசோக்குமார், 41, என்ற விவசாயி. கல்லுாரி மாணவனை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி, நீ உட்கார்ந்து டீ குடிக்கலாமா என்று சொல்லி கன்னத்தில் அடித்தார். பாதிக்கப்பட்ட மாணவன் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, நவீன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை