மேலும் செய்திகள்
கூலி தொழிலாளி சாவு: போலீஸ் விசாரணை
02-Mar-2026
தலைவலியால் முதியவர் உயிரிழப்பு
18-Feb-2026
குளித்தலை: குளித்தலை அருகே பழைய மணல் ரீச் அருகே திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பழையூர் மேடு கீழத்தெருவை சேர்ந்தவர் ராசு, 60, விவசாய தொழிலாளி. இவர் கடந்த, 24 காலை 9:00 மணி அளவில் தனக்கு சொந்தமான ஆடுகளுக்கு, இலைகளை வழங்குவதற்காக மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.அப்போது தவறி கீழே விழுந்ததில், தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இது குறித்து அவரது மகன் சிவச்சந்திரன், 35, கொடுத்த புகார்-படி, குளித்தலை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
02-Mar-2026
18-Feb-2026