உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

தாளவாடி:தாளவாடி அருகே இக்கலுாரை சேர்ந்த விவசாயி பிரபுசாமி, 62; நேற்று முன்தினம் இரவு கரும்பு தோட்டத்தில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை, பிரபுசாமியை விரட்டி தாக்கியது. அவர் சத்தமிடவே மற்ற விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். அதேசமயம் யானை தாக்கி பலத்த காயமடைந்த பிரபுசாமியை, தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !