உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிணற்றை ஆழப்படுத்தும் பணி: விவசாயிகள் விறுவிறு

கிணற்றை ஆழப்படுத்தும் பணி: விவசாயிகள் விறுவிறு

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் பெரும்பாலும் பருவமழை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே கிணற்று நீர்மட்டம் உயர்ந்து சாகுபடி மேற்கொள்ள முடியும். பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் சற்று கீழே போனதால், கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது. குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் காய்ந்து கிடக்கின்றன. எந்த சாகுபடியும் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதனால் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்ற கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை