உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கி.புரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கி.புரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, நடுப்பட்டி, தேவசிங்கப்பட்டி, திருமேனியூர், பாப்பகாப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, மேட்டுப்பட்டி, லாலாப்பேட்டை, மகாதானபுரம், புனவாசிப்பட்டி, வரகூர், மலையாண்டிப்பட்டி, பஞ்சப்பட்டி, பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை, 5:00 மணிக்கு மழை வெளுத்து வாங்கியது.இரவு வரை மழை பெய்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை