தந்தை, மகன் மாயம்போலீசார் விசாரணை
குளித்தலை: குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணம் பஞ்., குண்டன் பூசாரி ஊரை சேர்ந்தவர் பெரியசாமி, 38. இவரது அக்கா மகன் நாதிபட்டியை சேர்ந்த கோபால், 23, என்பவர் தனது இரண்டு வயது குழந்தை வினித்துக்கு, கடையில் தின்பண்டம் வாங்கித் தருவதாக கூட்டிச் சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை, மகனை தேடி வருகின்றனர்.பராமரிப்பின்றி காணப்படும்செட்டிபாளையம் தடுப்பணை பூங்காகரூர்:கரூர் அருகில், செட்டிபாளையம் தடுப்பணை பூங்கா பராமரிப்பு இல்லாமல் முட்புதராக காணப்படுகிறது.கரூர் அருகே, செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணையின் மூலம் அப்பி பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன. தடுப்பணையில் தண்ணீர் வரத்து இருக்கும் போது, நீர் வீழ்ச்சிபோல் தண்ணீர் கொட்டுவதால், பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தடுப்பணையை பார்வையிட வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன், அப்பிபாளையம் பஞ்சாயத்து சார்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.அதில் ஊஞ்சல், சிங்கம், புலி, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. தடுப்பணையை பார்வையிட்ட பின், பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பூங்கா சரியாக பராமரிப்பு இல்லாததால் முட்புதராக மாறி விட்டது. அப்பிபாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தடுப்பணைக்கு வருகின்றனர்.தற்போது கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இங்கு, பூங்கா முட்புதராக கிடப்பதால், விளையாட முடியாமல் செல்கின்றனர். பூங்காவை பராமரிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.