மேலும் செய்திகள்
கோடைகால இலவச பயிற்சி அண்ணா பல்கலை அழைப்பு
01-May-2025
கரூர், கரூர், மண்மங்கலம் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் இன்று (21ல்) நடக்கிறது.இதுகுறித்து, பல்கலைகழக ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் அருகே மண்மங்கலம் பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள, கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று ஒருநாள், கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில், தீவன பற்றாக்குறையை போக்க பசுந்தீவன உற்பத்தி, தீவன மரக்கன்று, தீவன விதை, தீவன மேலாண்மை மற்றும் சரிவிகித தீவனம் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள், கால்நடை தீவன வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் இன்று காலை, 10:30 மணிக்கு பயிற்சி மைய வளாகத்துக்கு வர வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
01-May-2025