உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆதனுார் காளியம்மன் கோவிலில் திருவிழா

ஆதனுார் காளியம்மன் கோவிலில் திருவிழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்.. ஆதனுாரில் வடக்கு பார்த்து காளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதே போன்று இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை, காவிரி நதியில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடங்களை தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் எடுத்து வந்தனர்.பின்னர் காளியம்மனுக்கு, 16 வகையான சிறப்பு அபி ேஷகம் செய்து வழிபட்டனர். இரவு காளியம்மனுக்கு திருக்கரகம் பாலிக்கப்பட்டது. தொடர்ந்து கருப்பசாமி, மதுரைவீரன், வீரபத்திரன் சுவாமிகள் முன்செல்ல, காளியம்மன் கரகம் வீதி உலா வந்தது. அப்போது வீதி நெடுகிலும் பக்தர்கள் ஆராதனை செய்து வழிபட்டனர்.நேற்று காலை காளியம்மனுக்கு அங்கபிரதசனம் செய்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ