மேலும் செய்திகள்
பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு
11-Oct-2024
கரூர்:தீபாவளி பண்டிகையையொட்டி, பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ, 2,000 ரூபாய்க்கு விற்றது.கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் செயல்பட்டு வரும், தினசரி பூ மார்க்கெட்டுக்கு, மதுரை, திண்டுக்கல், சேலம், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நாள்தோறும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.கடந்த மாதம், 1,000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை நேற்று ஒரு கிலோ, 2,000 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்ற அரளி பூ, 200 ரூபாய், 450 ரூபாய்க்கு விற்ற ஜாதி பூ, 900 ரூபாய், 800 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ, 1,000 ரூபாய், 800 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம், 1,200 ரூபாய்க்கு விலை அதிகரித்து விற்பனையானது.மேலும், 250 ரூபாய்க்கு விற்ற ரோஜா, 300 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்ற மரிக்கொழுந்து, 40 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்ற ஒரு கட்டு துளசி, 50 ரூபாய்க்கு விலை போனது.தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள், கரூர் பூ மார்க்கெட்டில் நேற்று குவிந்ததால், மார்க்கெட் வளாகம் களை கட்டி இருந்தது.
11-Oct-2024