உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஐந்தாவது சோம வார விழா

ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஐந்தாவது சோம வார விழா

குளித்தலை, டிச. 17-குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நேற்று மார்கழி மாத முதல் தேதி மற்றும் ஐந்தாவது சோம வார விழா கொண்டாடப்பட்டது.கோவில் குடிபாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மலைக்கு சென்று, ரத்தினகிரீஸ்வரரை தரிசித்து தேங்காய், பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக ஆடு, மாடு, கன்று குட்டிகளை வழங்கியும், விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைவித்த தானியங்களை மலையை சுற்றி துாவியும், குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்தியும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி