உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.66 லட்சம் நிதியுதவி வழங்கல்

புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் ரூ.66 லட்சம் நிதியுதவி வழங்கல்

கரூர்: சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக, புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனம் ரூ.66.10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், ந.புகளூர் ஆகிய பஞ்., பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளை டி.என்.பி.எல்., நிறுவனம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புன்னம், வேட்டமங்கலம் ஆகிய பஞ்., பகுதிகளில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாயக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக, 66.10 லட்சம் ரூபாய் காசோலையை, காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோவிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை