உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மீன் விற்பனை ஜோர்

மீன் விற்பனை ஜோர்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையில், மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்துக்கொண்டு வந்து கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மாயனுார் காவிரி ஆற்றில் அதிகமாக ஜிலேபி, ஊசி மீன்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, விடுமுறை தினம் என்பதால், மீன் விற்பனை தீவிரமாக நடந்தது. இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், ஊசி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, திருக்காம்புலியூர், சேங்கல், புலியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ