மேலும் செய்திகள்
வெண்டைக்காய் சாகுபடி விவசாயிகள் மும்முரம்
05-Jul-2025
கிருஷ்ணராயபுரம் ;பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், மல்லிகை கிலோ, ரூ.350க்கு விற்பனையானது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், செக்கணம், எழுதியாம்பட்டி, மாயனுார், காட்டூர், மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புதுப்பட்டி, தாளியாம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் பறிக்கப்பட்டு முசிறி, குளித்தலை, தோகைமலை, கரூர், திருச்சி பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வெயில் அடிப்பதால் செடிகளில் பூக்கள் பூத்துள்ளது. பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது, நேற்று விரிச்சிப்பூக்கள் கிலோ, 65 ரூபாய், சின்னரோஜா, 90 ரூபாய், மல்லிகை பூக்கள், 350 ரூபாய், செண்டுமல்லி, 40 ரூபாய் என விற்னையானது.
05-Jul-2025