உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை தர்மபுரியில் பூக்கள் விலை உயர்வு

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை தர்மபுரியில் பூக்கள் விலை உயர்வு

தர்மபுரி, டிச. 25-கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை உயர்ந்தது.தர்மபுரி மாவட்டத்தில், பரவலாக விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றனர். அதை அறுவடை செய்து தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள பூ மார்கெட்டில் விற்பனை செய்கின்றனர். இங்கு, விற்பனை செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், பூக்கள் தேவை அதிகரித்து, தர்மபுரி பூ மார்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம், ஒரு கிலோ குண்டுமல்லி, 700, சன்னமல்லி, 700, காக்கடான், 360, ஜாதிமல்லி, 400, சாமந்தி, 80, பன்னீர்ரோஸ், 100, பட்டன்ரோஸ், 150, அரளி, 160, சம்பங்கி 80, செண்டுமல்லி, 30 என விற்பனையானது.நேற்று மேலும் விலை உயர்ந்து, குண்டுமல்லி, 700, சன்னமல்லி, 900, காக்கடான், 700, ஜாதிமல்லி, 500, சம்பங்கி, 80, பன்னீர்ரோஸ், 120, பட்டன்ரோஸ், 200, சாமந்தி, 100, செண்டுமல்லி, 50 ரூபாய் என, 5 டன் பூக்கள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி