உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், டிச. 19-தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 3,000 தொகுப்பு ஊதியத்தில் ஊழியர் நியமனத்தை கண்டிப்பது, தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வருவாய் கிராம ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் கமலக்கன்னி, முன்னாள் மாநில துணைத் தலைவர் மகாவிஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் முத்துலட்சுமி, செயலாளர் சுந்தரம் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ