முப்பெரும் விழா நடக்கும் இடத்தில் கால்கோள் நடல்
கரூர், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு சாலை அருகில், தி.மு.க., முப்பெரும் விழா நடக்கும் இடத்தில் கால்கோள் நடும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள், ஈ.வெ.ரா, பிறந்த நாள், தி.மு.க., தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக, செப்.,17ல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு முப்பெரும் விழா கரூரில் நடக்கிறது.இதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்பட பல அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி உள்பட பலருக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால்கோள் நடுதல் விழா நேற்று நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.