உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சூதாட்டம் நான்கு பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் நான்கு பேர் கைது

கரூர், வெள்ளியணையில் பணம் வைத்து சூதாட் டம் ஆடியதாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், வெள்ளியணை வடக்கு தெரு பகவதி அம்மன், மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக அதே பகுதியை சேர்ந்த சேகர், 42; செல்வம், 30; கருப்பையா, 46; மருதமுத்து, 51; ஆகிய நான்கு பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ